ஒஸ்லோவில், Grünerløkka வில் உள்ள “Barnas hus” மழலையர் பள்ளியில், ஒரு பெண் ஊழியர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை Grünerløkka மாவட்டத்தின் தகவல் தொடர்பு ஆலோசகர் “Benedicte Nylund” உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஊழியர், ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை குழந்தைகளுடன் பணிபுரிந்தார். ஏப்ரல் 20 திங்கள் அன்று மழலையர் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான மேலதிக பணிகள் காரணமாக ஊழியர், கடைசியாக பணியிலிருந்து விடு சென்றிருந்தார்.
ஊழியருடன் தொடர்பில் இருந்த நான்கு குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களில் எவருக்கும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் இல்லை என தகவல் தொடர்பு ஆலோசகர் மேலும் கூறியுள்ளார்.
கூடுதலாக, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் மூன்று ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்த மூன்று பேருக்கும் இதுவரை நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: VG