ஊழியின் தாண்டவத்துக்கு ஒப்பானதாய் எங்கள் உறவுகளை தின்ற ஆழிப் பேரலை!

You are currently viewing ஊழியின் தாண்டவத்துக்கு ஒப்பானதாய் எங்கள் உறவுகளை தின்ற ஆழிப் பேரலை!
நீங்கா நினைவலைகள்…
இரு தசாப்தங்களை தொட்டு நிற்கிறது ஆழி ஆடிய தாண்டவத்தின் கோர நினைவுகள்!
கடலோரங்களை கருக்கிப்போட்ட கரிய நினைவுகளை நெஞ்சுக்குழிக்குள் நிரப்பி நீள்கிறது ஆழிப்பேரலையின் அவலம்!
அகவை பேதமின்றி அழித்தொழிக்கப்பட்ட இருண்ட நினைவுகளை இதயம் மீட்டி பார்க்கிறது!
வயிற்றுப் பசி தீர்த்த கடல்த்தாய் அனல் கொண்டு வீசிய ஆழிப் பேரலையின் அனர்த்தம் ஊழியின் தாண்டவத்துக்கு ஒப்பானதாய் எங்கள் உறவுகளை தின்றது!
கூட படுத்திருந் தவனும்! கூட உண்டு மகிழ்ந்தவனும்!
கூட விளையாடி திரிந்தவனும்!
தொட்டிலில் தூங்கிய
குழந்தையும்!
அடுப்படியில் உணவு ஆக்கிய அன்னையும்!
அலைக்கரங்களின் பிடிக்குள் அகப்பட்டு அழிக்கப்பட்ட கொடியை நாளை எப்படி மறப்போம்!!!
✍️தூயவன்
பகிர்ந்துகொள்ள

Leave a Reply