எதிரிகளின் அழிவு உறுதி: போர் நினைவு நாளில் வடகொரியா சபதம்!

You are currently viewing எதிரிகளின் அழிவு உறுதி: போர் நினைவு நாளில் வடகொரியா சபதம்!

போர் மூளும் அபாயம் ஏற்படும் என்றால், கிம் ஜோங் உன் கட்டளையிட்டால் எதிரிகளை மொத்தமாக அழிக்க தயாராக இருப்பதாக வடகொரியா சபதம் எடுத்துள்ளது. கிம் ஜோங் உன் கலந்து கொண்ட 71வது கொரிய போர் நினைவு நாள் நிகழ்வில் மூத்த ராணுவ அதிகாரிகள் பலர் கூட்டாக சபதம் எடுத்துள்ளனர். வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏதும் இல்லை.

பதட்டங்களைக் குறைப்பது மற்றும் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2019 முதலே முடங்கியுள்ளன. இந்த விவகராத்தில் தங்களின் முடிவு மாறப் போவதில்லை என்றும், அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக யார் வந்தாலும் தங்களுக்கு கவலை இல்லை என்றே வடகொரியா சமீபத்தில் அறிவித்திருந்தது.

கொரியா பிராந்தியத்தில் போர் சூழலை உருவாக்குவதில் அமெரிக்காவும் தென் கொரியாவும் தீவிரமாக முயன்று வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள வடகொரியா, கிம் ஜோங் உன் உத்தரவின் கீழ் எதிரிகளை மொத்தமாக அழிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

1953 ஜூலை 27 அன்று அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் வட கொரியா கையெழுத்திட்டது. அத்துடன் மூன்றாண்டுகள் நீடித்த போரும் முடிவுக்கு வந்தது.

தென் கொரியாவை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்தத்தில் அமெரிக்க தளபதிகள் கையெழுத்திட்டனர். இதனையடுத்து ஜூலை 27ம் திகதியை வெற்றி நாளாக வடகொரியா கொண்டாடத் தொடங்கியது.

ஆனால் தென் கொரியா தரப்பில் அந்த நாளில் எந்த நிகழ்வுகளை பதிவு செய்யவும் மறுத்தது. மேலும், போர் நிறுத்த அறிவிப்புடன் கொரியா போர் முடிவுக்கு வந்தது, போர் தொடர்பில் ஒப்பந்தம் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

இதனால் போர் நடக்கவில்லை என்றாலும் இரு பக்கமும் தற்போதும் போரிட்டு வருவதாகவே கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments