அதிகரித்துவரும் புவி வெப்பமாதலையும், சூழல் மாசடைவதையும் கட்டுப்படுத்துமுகமாக, “பெற்றோல் / டீஸல்” எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பாவனை உலகெங்கிலும், குறிப்பாகஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்டுவரும் அதேவேளை, மின்சக்தியில் இயங்கும் வாகனங்களின்பாவனையும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு வாகனத்தயாரிப்பு நிறுவனங்களும்மின்சக்தியில் இயங்கும் வாகன உற்பத்தியில் மும்முரமாக இறங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பயன்படுத்தக்கூடிய வாகனங்களை உற்பத்தி செய்யும்ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான “டொயோட்டா / Toyota” நிறுவனமானது, எதிர்காலத்தில்பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வழிமுறைகள்உள்ளடங்கலான பல்வேறு திட்டங்களையும் பரிசோதித்துப்பார்ப்பதற்காக, புதிய சோதனைநகரமொன்றை உருவாக்குவதில் முனைப்பு காட்டியுள்ளது.
இதற்காக, கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் பெருநிலப்பரப்பொன்றை தெரிவு செய்துள்ளஇந்நிறுவனம், அவ்விடத்தில் சுமார் ஏழு இலட்சம் சதுரமீட்டர்கள் பரப்பளவில் மாதிரி சோதனைநகரமொன்றை அமைக்கவுள்ளது.
மூன்று வெவ்வேறுவிதங்களிலான போக்குவரத்து வீதிகளை உள்ளடக்கியதாகஅமைக்கப்படவிருக்கும் “Woven City” என்ற பெயருடனான இந்நகரத்தில், வாகனங்களும், பாதசாரிகளும் பயன்படுத்தக்கூடிய விதத்தில், இருமருங்கிலும் பசுமையான மரங்களை கொண்டவழமையான போக்குவரத்துக்கான வீதிகளும், சிறியரக மின்னியல் வாகனங்களும், பாதசாரிகளும்மயன்படுத்தும் விதத்திலான வீதிகளும், பாதசாரிகள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் பூங்காவோடுகூடிய வீதிகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
சிறியரக தானியங்கி பேரூந்துகளும் இந்த நகரத்தில் சோதனை ஓட்டங்களை மேற்கொள்ளஇருப்பதாகவும், தானியங்கி வாகனங்களும் பெருமளவில் இந்நகரத்தில் சோதிக்கப்படஇருப்பதாகவும் “டொயோட்ட / Toyota” நிறுவனம் தெரிவிக்கிறது.
போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் விதத்தில் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, சுரங்கங்களின் வழியாக மக்களுக்கு தானியங்கி முறையில் பாவனைப்பொருட்களை விநியோகம்செய்யும் திட்டமும்,
வீடுகளுக்கு தேவையான மின்சக்தியை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளும் திட்டமும்,
வீடுகளில் “ரோபோ” இயந்திரங்களை பாவித்து வீட்டு வேலைகளை செய்விக்கும் திட்டமும்பரிசோதித்து பார்கப்படவிருக்கின்றன.
2021 ஆம் ஆண்டில் இந்நகரத்தின் நிர்மாணப்பணிகள் ஆரமரபிக்கப்பட இருப்பதாகவும், முதற்கட்டமாக “டொயோட்டா / Toyota” நிறுவனத்தை சேர்ந்த சுமார் 2000 பேர் இந்நகரத்தில்குடியமர்த்தப்பட இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள்உள்ளிட்டவர்களையும் உள்வாங்குவதற்கான திட்டங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைக்கப்படவிருக்கும் உத்தேச சோதனை நகரத்தின் வடிவமைப்பில், உலகப்புகழ் பெற்ற “Bjarke Ingels Group” என்ற டென்மார்க் நிறுவனம் பெரும் பங்காற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.