எத்தியோப்பியாவில் தீவிரமடையும் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை அழைப்பு!

You are currently viewing எத்தியோப்பியாவில் தீவிரமடையும் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை அழைப்பு!

எத்தியோப்பியாவில் தொடரும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் போர் குறித்து 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் பிரிவினைக்கு தூண்டுதல் ஆகிய செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு மோதலுடன் தொடர்புபட்ட தரப்புக்களுக்கு அந்த அறிக்கை ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் நிலை குறித்த அறிக்கையை ஒருமித்த கருத்துடன் வெளியிடுவது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. இந்த அறிக்கை குறித்து ரஷ்யா முரண்பட்டு வந்தது. இறுதியில் ரஷ்யாவுடன் சமரசம் எட்டப்பட்டு ஒருங்கிணைந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

எத்தியோப்பியா – க்ரேயின் வடக்குப் பகுதியில் தொடரும் ஆயுத மோதல்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. ரஷ்யாவும் சீனாவும் இது எத்தியோப்பியாவின் உள் விவகாரம் என வாதிட்டு வருகின்றன.

வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யாவும் சீனாவும் எத்தியோப்பிய விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபை தலையீட்டை தொடர்ந்து எதிர்த்து வருவதால் – அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸுடன் சேர்ந்து – பொருளாதாரத் தடைகள் போன்ற எந்தவொரு வலுவான நடவடிக்கைகளையும் எடுப்பது சாத்தியமற்றதாக உள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் காரணமானதுடன், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயரக் காரணமாக உள்ள எத்தியோப்பிய போர் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் தலைநகர் அடிஸ் அபாபா பகுதியைக் கைப்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் அவா்களை எதிர்த்துப் போராட களமிறங்குமாறு முன்னாள் படையினருக்கும் எத்தியோப்பிய இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமைஅழைப்பு விடுத்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply