என் ஆட்சிக் காலத்தில் தமிழின அழிப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!

You are currently viewing என் ஆட்சிக் காலத்தில் தமிழின அழிப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!
கனடாவில்  நடைபெற்ற தமிழ்ப் பாரம்பரிய பொங்கல் விழாவில்,  திரு Pierre Poilievre  அவர்கள்
“என் ஆட்சிக் காலத்தில்  தமிழின அழிப்பிற்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினர்  தமிழின  அழிப்பு குற்றவாளிகளாக  தண்டிக்கப்படுவார்கள்”.என்று  Conservative கட்சித் தலைவரும் கனடாவின் எதிர்கால பிரதமர் வேட்பாளருமான Pierre Poilievre  உறுதியளித்துள்ளார்.
சனவரி 18, 2025  அன்று நடைபெற்ற தமிழ் மரபுத்திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழா என்பன முன்னைய ஆண்டுகளைவிட மிகப்பெரிய வெற்றியாகவும் தமிழர் பண்பாட்டைச் சிறப்பிக்கும் நிகழ்வாகவும் இடம்பெற்றிருந்தது. Vaughan தமிழ் பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு 1,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் அரசியல் பிரமுகர்களையும் கலாச்சார ஆர்வலர்களையும் வர்த்தக நிதியாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்தது. இந்த ஆண்டு, City of Vaughanமும், York District School Boardம் இணைந்து இந்நிகழ்வை ஆதரித்து ஒருங்கிணைந்தனர்.
விழாவின் வெற்றியை உறுதி செய்ய Vaughan நகரத்தின் பல ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் மூலம், நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் Conservative கட்சித் தலைவரும் கனடாவின் எதிர்கால பிரதமர் வேட்பாளருமான Pierre Poilievre சிறப்பு உரையாற்றினார். அவர் தனது உரையில்,  சிங்கள அரசு   தமிழர்களுக்கு எதிராக நடத்திய தமிழின அழிப்பிற்கு  நீதியைப் பெற்றுத் தர உறுதியளித்தார். குறிப்பாக, ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட    இனப்படுகொலையாளிகளை அவரது ஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபூண்டார். “என் ஆட்சி காலத்தில் நீதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் உறுதிப்படுத்த, அரங்கமே கரகோசத்தால் நிறைந்தது.
தமிழர் சமூகத்துடன் Conservative கட்சியின் நீண்டநாள் உறவை நினைவுபடுத்திய அவர், ” தமிழின அழிப்பிற்கு  காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீதியின் ஜோதியை ஏற்றுவேன்,” என அவர் உறுதியளித்தார்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply