எம்மை வைத்தே எம் உரிமையை சிதைக்கும் சிங்களம்!

You are currently viewing எம்மை வைத்தே எம் உரிமையை சிதைக்கும் சிங்களம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாதங்களில் 1,600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாண தமிழ் இளையவர்கள் இராணுவத்தில் சேருவது முப்படையினரின் அர்ப்பணிப்பை நிருபிக்கிறது எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வந்த இராணுவத் தளபதி பலாலியில் மும்படைகளையும் சோ்ந்தவர்களை சந்தித்துப் பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிகளவு யாழ்ப்பாண தமிழ் இளையவர்கள் இராணுவத்தில் சேருவது அவா்கள் இராணுவத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உயர்ந்த மரியாதையையும் கடுமையாக உறுதிப்படுத்துகிறது. அத்துடன், உண்மையான சகவாழ்வுக்கான அவர்களின் தேவையை இது அடையாளப்படுத்துகிறது.

மீண்டும் ஒரு வன்முறை, பிளவுபடுத்தல்களைத் தூண்டி நல்லிணக்க முயற்சிக்கு பல்வேறு தடைகள் சிலரால் ஏற்படுத்தப்படுகின்றபோதும் இவ்வளவு பெரிய தொகையில் தமிழ் இளையவர்கள் இராணுவத்தில் இணைவது பெரிய திருப்பு முனையாகும். இது இராணுவம் தொடர்பாக உள்ள பிம்பத்தை இது மாற்றியமைக்கும் எனவும் இராணுத் தளபதி குறிப்பிட்டார்.

சமாதானத்திற்கான யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இங்குள்ள மும்படையினரும் யாழ்ப்பாண குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றனர். அத்துடன், உட்கட்டுமான அபிவிருத்திக்கும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அத்துடன், யாழ்பாணத்தில் அனைத்து வகையான சமூக விரோத, சட்டவிரோத நடவக்கைகள் மற்றும் கடத்தல் முயற்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இராணுவத்தின் பங்களிப்பு அளப்பரியது

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக விடுமுறை கூட இல்லாது மும்படையைச் சோ்ந்த பலரும் ஆற்றுகின்ற சேவை பெருமைக்குரியது. அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன் எனவும் இராணுவத் தளபதி கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply