எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

You are currently viewing எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் அந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை

அவர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது. ”நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது.

அதுவும் தற்போதை நிலையில்… சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது” என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments