எரிபொருட்களின் விலை வீழ்ச்சி! “Opec” கூட்டமைப்பு காரணம்!!

You are currently viewing எரிபொருட்களின் விலை வீழ்ச்சி! “Opec” கூட்டமைப்பு காரணம்!!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், எண்ணெய் உற்பத்தி அளவை அதிகரிப்பதாக, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான “Opec” அறிவித்துள்ளதால் எரிபொருட்களின் விலைகள் கணிசமானளவில் வீழ்ச்சியை அடைந்துள்ளன.

நாளொன்றுக்கு 4.00.000 பீப்பாய்களாக தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக “Opec” அமைப்பு இன்று (02.12.21) அறிவித்ததை தொடர்ந்து, அதியுச்ச நிலையிலிருந்த எரிபொருட்களின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. “Opec” கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி நாடுகள், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து, நாளொன்றுக்கு 40.494.000 பீப்பாய்கள் எண்ணையை உற்பத்தி செய்வதாக அறிவித்துள்ளமையும், இத்தொகையின் சுமார் அரைப்பங்கினை சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் உற்பத்தி செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி அதீதமான எண்ணெய் உற்பத்தியின் காரணாமாக, இன்னும் சில மாதங்களுக்கு எரிபொருள் விலை மந்தமாகவே இருக்குமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply