எல்லை கிராம மக்களின் இருப்பினை பலப்படுத்த புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்-செ.கயேந்திரன்!

You are currently viewing எல்லை கிராம மக்களின் இருப்பினை பலப்படுத்த புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்-செ.கயேந்திரன்!

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமங்களான ஒதியமலை மற்றும் காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த மக்களை பார்வையிட்டுள்ளதுடன் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

ஒதியமலை கிராமத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் அந்த மக்கள் விவசாயம் செய்வதற்கு முட்டுக்கட்டையாக அண்மை நாட்களில் படையினரின் பிரசன்னம் காணப்பட்டுளன அருகில் சிங்கள கிராமங்கள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

காஞ்சிரமோட்டை கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக குடியேற்றியும் எதுவித அடிப்படை வசதிகள் கூட செய்துகொடுக்காத நிலை காணப்படுகின்றது வனவளத்திணைக்களத்தினரும், படையினரின் மக்களின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக காணப்படுகின்றார்கள் மக்களின் காணிகளில் ஒரு மலசலகூட கிடங்கினை வெட்ட முடியாத நிலை ஒரு மரத்தினை கூட தறிக்கமுடியாத நிலை மரங்கள் வெட்டப்பட்டால்தான் கிராமத்திற்கான மின்சாரம் கிடைக்கும் என்ற நிலையில் மக்கள் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் முறையிட்டுள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்.

ஒதியமலைப்பகுதியில் மக்களின் காணிகள் மகாவலி எல் வலயத்திற்குள் சுவீகரிக்கப்பட்டுள்ளது அதன் காரணமாக இந்த நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் காணியில் விவசாயம் செய்யும் போது காணி உறுதி பத்திரங்களை காட்டுமாறு படையினர் கேட்டுள்ளதாகவும் விவசாய காணியில் செய்கை பண்ண முடியாத நிலைக்கு அச்சறுத்தல்களுக்கு தாம் உள்ளாகியுள்ளதாக முறையிட்டுள்ளார்கள்

இந்த மக்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றார்கள் மக்களுடன் நாங்கள் தொடர்ந்து செயற்படவேண்டிய நிலை உள்ளது

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களும் தாயத்தில் உள்ள எல்லைக்கிராம மக்களின் இருப்பினை பலப்படுத்துவதற்கு உதவிசெய்ய முன்வரவேண்டும் என்றும் செ.கயேந்திரன் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள