எழுத்தாளர் கோகுல் பிறேம்குமார் திட்டமிடப்பட்டு படுகொலை!

You are currently viewing எழுத்தாளர் கோகுல் பிறேம்குமார் திட்டமிடப்பட்டு படுகொலை!

எழுத்தாளர் கோகுல் பிறேம்குமார் நேற்றிரவு அடம்பனில் அவரது வீட்டு வாசலில் வைத்து வாகனத்தால் வலிந்து மோதப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

மன்னார், மாந்தை மேற்கு, அடம்பனில் வசித்துவந்த திரு திருமதி கோபாலகிருஷ்ணன் புனிதவதி தம்பதிகளின் மகன் பிரேம்குமார்
(கம்பிகளின் மொழி பிரேம்)
29 .12.1982 பிறந்து 05.07.2024 அன்று விபத்தில் கொல்லப்பட்டார்.

42 அகவை மட்டுமே கொண்ட இவ் எழுத்தாளர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கடலில் களமாடிய முன்னாள் போராளி (இளவீரன்), இந்நாளில் ஓர் எழுத்தாளன், கவிஞர், நாவலாசிரியர், பேச்சாளன், நடிகன்,தன்னார்வமிக்க முதலாளி, பண்பான மனிதநேயம் மிக்கவன், பல்துறை ஆற்றலோன், என பல பரிணாமங்கள் கொண்டவர்.

முன்னாள் போராளியாக தமிழீழ விடுதலைக்காக உழைத்து அவயமிழந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் வலிமையாக முன்னுதாரமாக வாழ்ந்த இந்நாள் ஊடவியலாளரான “கம்பிகளின் மொழி பிறேம்'(05.07.2024) அகால இறப்புக்குள்ளானமை தமிழுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

இது விபத்து என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட படுகொலை என ஊடகவியலாளர்களால் ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது மட்டுமல்ல இன்று நடப்பதும் இனப்படுகொலைகளே என்பதற்கு இன்னுமொரு படுகொலையாக இவரது படுகொலை சான்றாகியுள்ளது!

இந்த நள்ளிரவு விபத்து ஒரு திட்டமிட்ட படுகொலை என்ற மக்களின் குற்றச் சாட்டிற்கு அரச ஏவல் துறை, நீதித் துறை பதில் சொல்ல வேண்டும்!

போர்க்காலங்களில் போராடி வாழ்ந்து இனப்படுகொலைப் போரிலே ஒரு காலும் ஒரு கையும் இழந்தபோதும் நம்பிக்கையோடு நிமிர்ந்தெழுந்து நடந்த இனப்படுகொலைகளின் “போரின் சாட்சிகளை” அச்சமின்றி எழுதிய எழுதுகோலொன்று இன்று கொல்லப்பட்டமையானது எழுத்தாளர்களை முடக்கும் அரச பயங்கரவாதச் செயலாகவே பார்க்க வைக்கின்றது!

இவர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கான அதீத பங்கை நிலைநாட்டிய போராளி என்ற வகையிலும் எழுத்தாளர் என்ற வகையிலும் ஒரு பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களிலும் அரச படைகளாலும் கைக் கூலிகளாலும் கொல்லப்பட்ட எந்த படுகொலைக்கும் இற்றை வரையில் நீதி கிடைக்கவில்லை!

எழுத்தாளர்களை அச்சுறுத்த படுகொலைகளை கையிலெடுக்கும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து ஒழிக்க எழுத்தாளர்கள் இன மத பேதம் கடந்து முன் வரவேண்டும்!

தமிழர் தரப்பில் கண்டனங்கள் எழுந்து நீதி கேட்க முன் வர வேண்டும்!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments