எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூர்ந்த தமிழர்…!

You are currently viewing எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூர்ந்த தமிழர்…!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தலை, எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி உணர்வாளர் ஒருவர் அழிப்பினை நினைவுகூர்ந்துள்ளார்.

ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்தன் என்ற 46 வயதான நபர் முள்ளிவாய்க்கால் தமிழினப் அழிப்பின் நினைவேந்தலை இவ்வாறு எவரெஸ்ட் சிகரத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன்.

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் நினைவுகூர வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டடேன்.

இதற்காக நான் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி எவரெஸ்ட் மலையின் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தேன்.

என்னுடன் 5 பேர் கொண்ட குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தனர்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் அழிப்பினை நினைவேந்தல் நாளான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூர்ந்தேன் என தெரிவுத்துள்ளார்..

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments