அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று(04.08.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லைபிரியா நாட்டிற்கு சொந்தமான இக்கப்பல் ஏடன் வளைகுடா வழியாக டிஜிபோதி நாட்டிற்கு சென்றுகொண்டிருந்தது.
அந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் இருந்து 125கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கப்பலை குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.