ஏமனின் ஹவுதிகளை அடக்க முடியாமல் திணறும் வல்லரசு நாடு!

You are currently viewing ஏமனின் ஹவுதிகளை அடக்க முடியாமல் திணறும் வல்லரசு நாடு!

ஏமனில் ஹவுதிகள் மீது தொடர்ந்து ஐந்து வாரங்களாக தாக்குதல் முன்னெடுத்தும், அமெரிக்காவால் ஹவுதிகளை அடக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக செல்லும் வணிக மற்றும் சர்வதேச கப்பல்களை ஹவுதிகள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் MQ-9 Reaper ட்ரோன் ஒன்றையும், அமெரிக்காவுக்கு சொந்தமாக இரு வணிக கப்பல்களையும், அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 11ம் திகதியில் இருந்து ஹவுதிகள் மீது 32 தற்காப்பு தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. ஆனால் அந்த தாக்குதல்களால் ஹவுதிகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதனிடையே, ஹவுதிகளை தீவிரவாத அமைப்பு என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் பொருளாதார உதவிகள் இன்றி, ஹவுதிகள் தாக்குதல்களை குறைத்துக் கொள்வார்கள் என அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என அவுதிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹவுதிகள் தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்க இராணுவம் அவர்களின் இலக்குகளைத் தாக்கும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply