ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 80 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமிய நாடக காணப்படும் ஏமனில் நோன்பு காலம் என்பதால் தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு பாடசாலை ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு உதவிப் பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் போட்டி போட்டு கூடியதால் சனா நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சன நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகியுள்ளதுடன், 322 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகமென அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளத்துடன் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் ஏமன் நாட்டின் போராட்டக் குழுவான ஹவுத்தி போராளிகள் குழு அரசாங்கத்தின் அலட்சியத்தினாலே அப்பாவி உயிர்கள் பறிபோனதாக குற்றம் சாட்டியுள்ளது.