ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில், வியாழக்கிழமை 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உள்பட 5 பணியாளர்களும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலும் வேறு 2 படகுகளும் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், படகில் பயணித்த மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியிலிருந்து ஏமன் நாட்டுக்கு செங்கடல் – ஏடன் வளைகுடா பகுதியாகச் சென்றவர்களில் 558 பேர் பலியானதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது.