நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நீங்கி அமைதியான நிலை ஏற்பட கிளிநொச்சியில் விசேட பிரார்த்தனை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வன்னி கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த வழிபாடு இன்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை முன்பாக இடம்பெற்றது.
நாட்டில் தற்பொழுது உள்ள நிலை மாறி, மக்களிற்கு அமைதியும், பொருளாதார நெருக்கடியற்ற நிலை உருவாக இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என தெரிவித்து குறித்த பிரார்த்தனை இன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் ஏ9 வீதியில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருச்சபையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரார்த்தனை நிகழ்வில், கத்தோலிக்க திருச்சபை, அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை, பப்ரிஸ் திருச்சபை ஊழியர்கள் மற்றும் திருச்சபை மக்களும் பங்கு கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/fd7af8fd-521d-4cd4-91cd-60f5e97d4f38/22-625495c8ec03a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ca7194ec-6185-47bb-86ce-54bd7f2ff719/22-625495c926cd3.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2732afec-4a01-44ae-b55f-4649089a718e/22-625495c959ce8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e379332b-7938-40b4-a5f7-533e28e1d284/22-625495c988a39.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/48b513bc-c2e7-4758-9569-e1c149cc52d6/22-625495c9c4cfe.webp)