ஐரோப்பாவில் கொரோனா : பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing ஐரோப்பாவில் கொரோனா : பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியுள்ளது!

ஐரோப்பாவில் கொரோனா தொற்று இறப்புகளின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துவிட்டதாக AFP செய்தி நிறுவனம் தொகுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் இதுவரை 860,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 459,000 பேர் ஐரோப்பாவில் உள்ளனர்.

இதுவரை பதிவான 42,300 க்கும் மேற்பட்ட இறப்புகளில், 30,063 இறப்புகள் ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளன.

ஆகவே, நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் தொற்றுநோய்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய மக்களே ஆவர்.

இறப்பு பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது – 12,428, ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது – 8,189. (NTB)

பகிர்ந்துகொள்ள