ஐரோப்பியநாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பு!

You are currently viewing ஐரோப்பியநாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பு!
பாலஸ்தீனியம், இறைமையுள்ள நாடு என அங்கீகரிப்பதாக நேற்று நோர்வே அறிவித்திருந்ததையை தொடர்ந்து, இதுவரையும் நோர்வேயில் இயங்கி வந்த பாலஸ்தீனிய பிரதிநிதிக்கான அலுவலகம், பாலஸ்தீனிய தூதரகம் என்ற தகைமையை பெறுகிறது.
பாலஸ்தீனியத்தை அங்கீகரித்தாலும், அங்கிருந்து மேற்கொள்ளப்படும் வன் முறைகளை ஆதரிக்கவில்லை என நோர்வே இன்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தை குறிப்பிட்டே இது சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பென் ஆகிய நாடுகளிலிருந்து தனது தூதுவர்களை திரும்ப அழைத்துள்ளது, இஸ்ரேல்…
இஸ்ரேலிய பிரதமர்மீது சர்வதேச பிடியாணை கோரப்பட்டுள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்குமானால், மேற்படி நாடுகள் அதனை மதிக்கும் என அந்தந்த நாடுகள் அறிவித்துள்ள நிலையிலும், பாலஸ்தீனியத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு இந்நாடுகள் ஆதரவளிப்பதாலும் இஸ்ரேல் தனது தூதுவர்களை உடனடியாக திரும்ப அழைத்துள்ளது.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply