ஐரோப்பிய ஆயுதப்படை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யா!

You are currently viewing ஐரோப்பிய ஆயுதப்படை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யா!

ஐரோப்பிய பாரம்பரிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா முறைப்படி வெளியேறியது. பெர்லின் சுவர் இடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு (1990ஆம் ஆண்டு) CFE எனும் மரபுசார் ஆயுதப் படைகளுக்கான ஒப்பந்தம் (Conventional Armed Force in Europe) கொண்டுவரப்பட்டது.

அதன்படி வழக்கமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டது. இதன் நோக்கம், பனிப்போர் போட்டியாளர்களை ஒரு விரைவான தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய படைகளை கட்டியெழுப்புவதை நிறுத்துவதாகும்.

இந்த நிலையில், ரஷ்யா CFE ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. நேட்டோவின் விரிவாக்கம் அத்தகைய ஒத்துழைப்பை சாத்தியமற்றதாக்கியுள்ளது என்று ரஷ்யா காரணம் கூறியுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இதனை ஒரு ”வரலாறு” என்று குறிப்பிட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் நலன்களை பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் உள்ள மரபுசார் ஆயுதப் படைகள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் தனது விருப்பத்தை ஏற்கனவே ரஷ்யா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply