ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம் : இஸ்ரேல் – காசா இடையிலான போர் !

You are currently viewing ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம் : இஸ்ரேல் – காசா இடையிலான போர் !

இஸ்ரேல் – காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது.

லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டியன் நகரில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி பேரணியில் மக்கள் ஈடுபட்டனர்.

பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பிரான்ஸில் இசை வாத்தியங்கள் முழங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று லண்டனிலும் ஏராளமான மக்கள் கூடி முழக்கங்களை எழுப்பிப் போராடினர். இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று தூதரகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

ஸ்வீடனிலும் சாலைகளில் குவிந்த மக்கள் காஸா மக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 2023 அக்டோபர் 7 முதல் போர் நீடித்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் படைகளைக் குறிவைத்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும் காஸாவில் உள்ள இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் முறையாக கடைபிடிக்கவில்லை எனக் கூறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுடன் எல்லையைப் பகிா்ந்துவரும் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா படையினா், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். தற்போது ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply