வரலாற்றில் முதல் முறையாக 200க்கும் மேற்பட்ட ராணுவ டாங்கிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு இஸ்ரேலில் விற்பனை செய்ய உள்ளது. உலக நாடுகளில் நிலப்பரப்பு அளவில் மிகச் சிறிய நாடாக இஸ்ரேல் இருந்தாலும், தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் இஸ்ரேல் முன்னணி நாடாக விளங்கி வருகிறது.
இத்தகைய அதிக திறன்களை கொண்டுள்ள இஸ்ரேல், தங்களது இராணுவ ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை குறைந்த அளவே வெளிநாடுகளுக்கு வழங்கி வருகின்றனர்.
அப்படி இருக்கையில், வரலாற்றில் முதன்முறையாக பெயர் தெரியவராத ஐரோப்பிய நாடுகளுக்கு 200க்கும் மேற்பட்ட Merkava Mk2 மற்றும் Mk3 டாங்கிகளை இஸ்ரேல் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் டாங்கிகள் ஐரோப்பிய நாடுகளை அடைந்த பிறகு ஒருவேளை அவை உக்ரைனுக்கு அனுப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கோட்பாடுகளின் படி, டாங்கிகள் ஐரோப்பிய மண்ணை அடைந்த பிறகு இஸ்ரேலின் நடுநிலைமை கொள்கையில் எத்தகைய சமரசமும் செய்யப்படாமல் டாங்கிகள் உக்ரைனுக்கு மாற்றப்படலாம்.