ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்
சண்டே ஒப்சேவருக்கான பேட்டியொன்றின் போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் கலந்துரையாடுவோம் சர்வதேச நிபுணர்களுடன் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சில மாற்றங்களை மேற்கொள்ளப்போகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.