மத்திய கிழக்கில் தொடரும் பரவலான மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பன சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பாஸ்சம் சபாக் கவலை வெளியிட்டுள்ளார்.
இவை அனைத்தும், பலதரப்பு இராஜதந்திரத்தின் தோல்விகளாலும், ஐக்கிய நாடுகள் சபை அதன் ஸ்தாபக நோக்கங்களை அடையத் தவறியதாலும் ஏற்பட்டவை என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இராஜதந்திரம் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துவைக்க முயன்றபோது, இன்று அதிக நேரடி போர்கள் மற்றும் பயங்கரவாத கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் மேலேத்தேய முகவர்களுக்கு இடையிலான போர்களை நாங்கள் காண்கிறோம்.
அனைவருக்கும் நிலையான வளர்ச்சியை அடைவதில் முயற்சிகள் மற்றும் வளங்களை முதலீடு செய்வதற்குப் பதிலாக, சிலர் மற்ற நாடுகளின் வளங்களை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
மேலும் எமது நாடுகளை வறுமை மற்றும் அழிக்கும் ஒருதலைப்பட்ச கட்டாய நடவடிக்கைகளை போர்கள் மூலம் திணிக்கிறார்கள்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிரியா இணையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறது.
அதன் வளர்ச்சி முன்னேற்றத்தை சிதைக்கவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், குழப்பத்தை பரப்பவும், பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுகிறது.” என்றார்.