ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு மற்றும் தமிழினஅழிப்பு நிழற்பட ஆதாரக் காட்சிப்படுத்தல்.
01/09/2021 அன்று பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த ஐ.நா நோக்கிய நீதிக்கான ஊர்திகளின் பயணமும், நிழற்படக் காட்சிப்படுத்தலும்.
பதினொரு நாட்கள் பிரான்சின் பல மாவட்டங்களைக்கடந்து, நூற்றிற்கும் மேற்பட்ட நகரசபைகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி எமது கோரிக்கைகள்அடங்கிய மனுக்களை கையளித்து, பிரெஞ்சு பாராளுமன்றம் ,ஐரோப்பியப் பாராளுமன்றம் என பிரான்சின் முக்கிய அரசியல் மையங்களை ஊடறுத்து பல பிரெஞ்சு ஊடகங்களைச் சந்தித்து தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்துப் பயணித்துவந்த நீதிக்கான பயணம்
11/09/2021 மாலை 15 மணியளவில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலை (முருகதாசன் திடலை) சென்றடைந்தது.
13/09/2021 திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு மற்றும் தமிழினவழிப்பு ஆதார நிழற்படக் காட்சிப்படுத்தல் நடைபெற்றது. அதன் போது எமது கோரிக்கைகள்அடங்கிய மனுவும் மற்றும் தமிழக, தாயக மக்கள் பிரதி நிதிகளின் அறிக்கைகளும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைய வழிச் சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்தும் ஜெனிவாவில் உள்ள தூதரகங்கள் மற்றும் நகரசபைகளுடன் அரசியல் சந்திப்புகள் நடைபெறவுள்ளது.
மேலும் 14/09/2021 செவ்வாய்க் கிழமை மற்றும் 15/09/2021 புதன் கிழமை காலை 9h00 மணிமுதல் மாலை 18 மணிவரை
ஐக்கியநாடுகள் அவை முன்றலில்
(முருகதாசன் திடல்) கவனயீர்ப்பு மற்றும் தமிழினப் படுகொலை ஆதார நிழற்படக் காட்சிப்படுத்தலும் நடைபெறும்.
Palais des Nations
1211 Geneva, Switzerland
காலம்:14,15-09-2021