ஒக்சிசன் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறங்கிய சுவிஸ் விமானம்!

You are currently viewing ஒக்சிசன் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறங்கிய சுவிஸ் விமானம்!

ஸ்டாக்ஹோமில் இருந்து நேற்றுஅதிகாலை சூரிச்  நோக்கி வந்து கொண்டிருந்த, ஏர்பஸ் A320  ரக சுவிஸ் விமானம்  சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, பிராங்போர்ட்டில்  திட்டமிடப்படாமல் தரையிறங்கியுள்ளது.

LX1255 இலக்க விமானத்தின் திட்டமிடப்படாத தரையிறக்கத்திற்கு, ஒக்ஸிஜன் கொள்கலனில் அழுத்தம் குறைந்ததே காரணம்  என்று சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது.

பயணிகளுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும், அனைத்து பயணிகளும், பிராங்போர்ட்டில் இருந்து அவர்கள் செல்லும் இடங்களுக்கு விமானங்களில்அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply