ஒன்ராறியோ நகராட்சி மற்றும் கல்விச்சபைகளுக்கான தேர்தல்களில், நான்கு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ரொரண்டோ மாவட்ட கல்விச் சபையின் ஸ்காபரோ மத்தி உறுப்பினராக நீதன் சான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காபரோ ரூஜ் பார்க் அறக்கட்டளைக்கு மருத்துவர் அனு சிறிஸ்கந்தராஜா தெரிவாகியுள்ளார்.
மார்க்கம் நகரசபையின் உறுப்பினராக ஜூனிட்டா நாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காபரோ வடக்கு, கல்விச்சபை உறுப்பினராக யாழினி ராஜகுலசிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.