கொவிட் ஒமிக்ரோன் பிறழ்வானது, இறுதி பிறழ்வு கிடையாது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுக்கின்றது.
இந்த ஒமிக்ரோன் பிறழ்வுடன், கொவிட் 19 பெருந்தொற்று உலகை விட்டு முழுமையாக இல்லாது போகும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிலரால் வெளியிடப்படும் அவ்வாறான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட் 19 தொற்றை முடிவுக்கு கொண்டு வர கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
அனைத்து நாடுகளும், 70 வீதமான முழுமையான தடுப்பூசி திட்டத்தை முழுமைப்படுத்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலக்கு வெற்றிக்கொள்ளப்படும் பட்சத்தில், உலக பெருந்தொற்றிலிருந்து மீண்டெழ முடியும் என அவர் கூறுகின்றார்.