28 வயதான அவர், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.
“இந்தக் கண் இமைக்காமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. ஏனெனில், என் முகத்தின் இந்தப் பக்கம் முழுதாக முடங்கியுள்ளது,” என்று கூறினார்.
“என் காது, முக நரம்புகளைத் தாக்கிய இந்த வைரஸால்தான், என் முகம் செயலிழந்துள்ளது,” என்று கனடாவில் பிறந்த பாடகர் தனது மூன்று நிமிட வீடியோவில் முகத்தின் வலது பக்கத்தைக் குறிப்பிட்டுக் கூறினார்.
அவர் தனது ரசிகர்களை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் ஜஸ்டின் பீபர். மேலும் அவர், “உடல் ரீதியாக, வெளிப்படையாகச் செய்ய இயலாது,” என்று அடுத்து வரவிருக்கும் தனது நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறினார்.
அவரைப் பின்தொடரும் 240 மில்லியன் மக்களுக்கு, அவர் சிரித்து, கண் சிமிட்டி, முகத்தின் வலது பக்கத்தை எப்படி அசைக்க முடியவில்லை என்று காட்டினார்.
“இது மிகவும் தீவிரமானது என்பதை நீங்கள் பார்க்க முடியும். இது இவ்வளவு தீவிரமாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நான் விரும்புகிறேன். ஆனால், என் உடல், நான் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகிறது.
நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நான் இந்த நேரத்தை ஓய்வெடுக்கவும், நூறு சதவீதம் மீண்டு வரவும் பயன்படுத்துகிறேன். அதன்மூலம் நான் எதற்காகப் பிறந்தேனோ அதைச் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.