ஒரு மாத சமூக முடக்கத்தின் பின் மீளத் திறக்கப்பட்டது பிரிட்டன்!

You are currently viewing ஒரு மாத சமூக முடக்கத்தின் பின் மீளத் திறக்கப்பட்டது பிரிட்டன்!

பிரிட்டனில் கடந்த ஒரு மாத காலம் அமுல்படுத்தப்பட்ட சமூக முடக்கல் உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து உணவகங்கள், கடைகள், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டன.

பிரிட்டனில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவியதை அடுத்து, கடந்த மாதம் ஒரு மாத காலத்துக்கு சமூக முடக்கல் உத்தரவு அறிவிக்கப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகளை அடுத்து பிரிட்டனில் தினசரி தொற்று நோயாளர் தொகை தற்போது 3,500 வரை குறைந்துள்ளது.

முன்னர் தினசரி 1000 வரையான கொரோனா மரணங்கள் பதிவாகி வந்த நிலையில் நேற்று 13 உயிரிழப்புகள் மட்டும் பதிவாகி இருப்பதாக பிரிட்டன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து கோவிட்19 சமூக முடக்கல் உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் நேற்று முதல் பிரிட்டனில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

ஒரு மாத முடக்கத்துக்குப் பின்னர் வெளியே வந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி உற்சாகத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்தனர். மதுபான நிலையங்கள், உணவகங்களிலும் ஒரு மாதத்துக்குப் பின்னர் மக்கள் கூடியுள்ளனர்.

தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரித்தானிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டனில் இதுவரை 43 இலட்சத்துக்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1 இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்குப் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply