இலங்கையில் கடந்த நாட்களை விட நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 150 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 92 பேரும், சென்னையிலிருந்து வந்த 5 பேரும், இலங்கை கடற்படையினர் 53 பேருமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் 97 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 726 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.