மக்களின் ஆணையை நிறைவேற்றுவதும் அதை அனைத்து தரப்பினர்க்கும் மக்களின் குரலாக எடுத்துரைப்பதுமே மக்கள் பிரதிநிகளின் கடமை!
அந்தவகையில் தமிழ் தலைவர்களை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்தபோது “ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிற்குத் தீர்வு சாத்தியமில்லை! சமஸ்டித் தீர்வு வேண்டும்!” என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதியாக வலியுறுத்தியமை பாராட்டிற்குரியது!
யாரோடு பேசினாலும் நெஞ்சை நிமிர்த்தி இனமானத் தமிழனாக சோரம் போகாமல் அடிமையாகாமல் மக்களிற்கு உண்மையாகப் பேசும் கஜேந்திரகுமார் தமிழினத்திற்கு இன்று காலம் கையில் தந்த கொடை!
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அவரின் கரங்களை வலுப்படுத்தி தமிழ் இனத்திற்கான அரசியல் அதிகாரங்களைப் பெறுவதே தாயத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் சிந்தனைக் குவிவோடு செய்ய வேண்டிய கடமை!
குறைந்தபட்சம் ஒற்றை வாக்கும் சிங்களக் கட்சிகளிற்குப் போகாமல் தமிழினம் இந்தத் தேர்தலூடாகத் தன்னைத் தற்காத்துக் கொள்வது தாயகத் தமிழரின் இன்றியமையாத தேவை என்பதை அனைத்து தரப்பினரும் பொறுப்போடு உணர்ந்து செயற்பட வேண்டும்!