ஒலியின் வேகத்தை விடவும் 27 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய புதிய “ஹைப்பர் சோனிக் / Hypersonic” ஏவுகணை தயாரிப்பில் ரஷ்யா வெற்றி!

You are currently viewing ஒலியின் வேகத்தை விடவும் 27 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய புதிய “ஹைப்பர் சோனிக் / Hypersonic” ஏவுகணை தயாரிப்பில் ரஷ்யா வெற்றி!

ஒலியின் வேகத்தை விடவும் 27 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய புதிய ஏவுகணை தயாரிப்பு இறுதி செய்யப்பட்டிருப்பதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புதின்” அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஹைப்பர் சோனிக் / Hypersonic” எனப்படும் அதிவேக ஏவுகணை தொழிநுட்பத்தை பல்லாண்டுகளாக பரிசோதித்து வந்த ரஷ்யா இப்போது அதில் முழுமையான வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல், ஆழ்கடலுக்குள்ளால் ஊடறுத்து செல்லும் அணுவாயுதங்களை தாங்கிச்செல்லும் ஏவுகணைகளையும், போர்க்கப்பல்களில் பாவிக்கக்கூடிய நவீன ஏவுகணைகளையும், ரஷ்யா தொடர்ந்து பரீட்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

“ஹைப்பர் சோனிக் / Hypersonic” எனப்படும் அதிவேக ஏவுகணைகளை இன்னும் இரண்டு வருடங்களில் தயாரிக்கவிருப்பதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவும் இந்த ஏவுகணைகளை தயாரிப்பதை இறுதிப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னதாக அதன் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அதிபர் புதின் அவர்களின் காலத்தில், ஆயுத பலத்திலும், பொருளாதாரபலத்திலும் ரஷ்யா முன்னேறி வருவது கவனிக்கத்தக்கது.

பகிர்ந்துகொள்ள