Oslo universitetssykehus
வியாழன் காலை, தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான புதிய நடவடிக்கைகள் குறித்து உள்ளக செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் உள்ள அனைத்து ஊழியர்களும் சோதிக்கப்பட வேண்டும் என்றும், பார்வையாளர் தடை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் கட்டாய துணை தேவைப்படும் நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரமுடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது, மேலும் தொற்று மருந்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரிவோருக்கான பல புதிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த அறிக்கையில் குறிப்பிடு டப்பட்டுள்ளது.
ஆதாரம்/ மேலதிக தகவல்: DN