ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலை பணியாளர்கள் 1081 பேர் தனிமைப்படுத்தலில்! தொடரும் “கொரோனா” அகோரம்!!

You are currently viewing ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலை பணியாளர்கள் 1081 பேர் தனிமைப்படுத்தலில்! தொடரும் “கொரோனா” அகோரம்!!

ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையின் பணியாளர்கள் 1081 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14 பேருக்கு “கொரோனா” தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“கொரோனா” தொற்று ஏற்பட்டவர்களுடன் நேரடியான தொடர்புகள் மூலமாகவோ, அல்லது, “கொரோனா” பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுவந்ததாலேயோ, “கொரோனா” தொற்று இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வைத்தியசாலை நிர்வாகம், மிக அதிகளவிலான பணியாளர்கள் இவ்விதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், வைத்தியசாலையின் சீரான இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்படலாமெனவும் அச்சம் தெரிவித்துள்ளது.

23.000 பணியாளர்களை கொண்டுள்ள மேற்படி வைத்தியசாலையில் மேலும் பல பணியாளர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படும் அபாயம் தோன்றும் நிலையேற்பட்டால், மாற்றீடாக வேறு நாடுகளிலிருந்து சுகாதாரப்பணியாளர்களை தருவிக்கமுடியாத சூழ்நிலை இருப்பதால், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பணியாளர்களையே, முடிந்தளவு பாதுகாப்பு ஏற்படுகளோடு மீண்டும் பணியிலமர்த்துவதை தவிர வேறு வழிகளேதுமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள