
ஒஸ்லோ சிவசுப்பிரமணியர் ஆலய கட்டிட பணிகளில் 3 கட்ட பணிகளான நீரிணைப்பு, மின்சார இணைப்பு, காற்றோட்ட வசதி நிலத்திலிருந்து வெப்பத்தை எடுப்பதற்கான குழாய் கிணறுகள் (jordvarme), சமையலறை, குருக்கள் தங்குமறை, வாடகைக்கு கொடுக்ககூடிய கீழ் மண்டபம், வாகனதரிப்பிடத்துடன் மற்றும் உள்புறம் சுவர்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, வெளிவீதி நிலம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஆலயக்ட்டிடத்தை மக்களின் பாவனைக்கு உகந்த கட்டிடமாக எதிர்வரும் ஜூலை 2020 மாதத்தில் முடிவடையும்.
இவ்வேலைகள் முடிவடைந்ததும் ஆலய கட்டிடத்தை பாவனைக்குட்படுத்துவதற்கு மாநகரசபையின் அனுமதி (midlertidig brukstillatelse) பெறும் சாத்தியமுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

எமது புதிய ஆலயத்தை திட்டமிட்டபடி உட்புற ஆலய சந்நிதிகளை (விநாயகர், அம்மன், சிவன், பார்வதி, வைரவர், சன்டேஸ்வரர், சிற்ப வேலைப்பாட்டுடன் ஆலய முன் கதவு, மற்றும் 18 அடி உயரமான விமானம்) அமைப்ப்தற்கு எமக்கு இன்னும் கிட்டதட்ட 7 மில்லியன் குரோணர்கள் தேவையாகவுள்ளது. இத்தொகையானது ஆலய திட்டமிட்ட தொகையில் 12 % மாகும்.
நாம் ஆலய வேலைகளை 10 வருடங்களிற்கு முன் திட்டமிட்டபோது 1 குரோணர் 8,70 இந்திய ரூபாய். தற்போது 1 குரோணர் 7,70. அத்துடன் ஆண்டுதோறும் விலைவாசி அதிகரிப்பு 2 தொடங்கி 3 % ஆல் அதிகரித்திள்ளது. இந்த விகிதத்தின்படி கட்டிட வேலைகளின் செலவும் நாம் திட்டமிட்ட தொகையிலிருந்து அதிகரித்துள்ளது.

மிகுதியுள்ள 12 % வேலைகளில்தான் எமது ஆலய சிற்பவேலைகளை எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டுவதற்கும், எமது இனம் ஜரோப்பியர்களுக்கு முன்னரே சிற்பக்கலைகலில் முன்னோடியான சமுதாயம் என காட்டுவதற்கும், எல்லா தமிழர்களும் வேறுபாடுகளை தவிர்த்து நோர்வேயில் இவ்வாலயத்தை சீராக உருவாக்குவோம்.
இந்திய சிற்பிகளின் வேலைப்பாடுகளில் விநாயகர் சந்நிதி கருங்கல்லில் சிற்ப வேலைகளுடன் செய்வதற்கு மத்திரம் 60 % முற்பணம் கொடுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுகிறது.
2021 may மாத த்தில் கும்பாபிசேகம் செய்வ்தற்கு நாம் இன்னும் 2 மாதங்களுக்குள் குறைந்தது 3 மில்லியன் அடிடயார்களிடமிருந்து கிடைத்தால் மாத்திரம் தான் மிகுதி சிற்வேலைகள இந்தியாவில் செய்வதற்கு நாம் முற்பதிவு கொடுக்கலாம்.
தங்கள் பங்களிப்பை விரைவில் வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கட்டிட குழுவினர்