ஓட்டமாவடியில் விபத்து ; தாயும், மகனும் காயம்!!

You are currently viewing ஓட்டமாவடியில் விபத்து ; தாயும், மகனும் காயம்!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில்  சனிக்கிழமை (05) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி வீதியைக் கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply