இலங்கையில் ஓயாத அலையாக கொரோனா தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 72 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் (ஏப்-24) 880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் 969 தொற்றாளர்களும், கடந்த வியாழன் அன்று 672 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 2 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 571 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பூரணமாக குணமடைந்து வெளியேறியவர்களது எண்ணிக்கை 94 ஆயிரத்துர் 155 ஆக உள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் நால்வர் உயிரிழந்திருந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்து 778 ஆக உள்ளமை குறிப்படத்தக்கது.