வியாழக்கிழமை, ஒஸ்லோவில் 79 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நகராட்சி அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வாரங்களில், தலைநகரில் ஒரே நாளில் பெரும்பாலான தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்ட நாளாகும். கடந்த இரண்டு வாரங்களில், தலைநகரில் மொத்தம் 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, அக்டோபர் 7 ஆம் திகதி பதிவுசெய்யப்பட்ட 81 பேரைத் தவிர, நேற்றைய நாள்தான் ஒஸ்லோவில் கூடுதலான புதிய நோய்த்தொற்றுக்கள் பதிவான நாளாகும். இருப்பினும், நாட்களுக்கு இடையில் பெரும் மாறுபாடு உள்ளது.
கூடுதலான புதிய நோய்த்தொற்றுகள் “Frogner” மாவட்டத்தில் பதிவாகி உள்ளது, Frogner இல் கடந்த 14 நாட்களில் மட்டும் 79 புதிய தொற்றுக்களை பதிவாகியுள்ளன. தொடர்ந்து “Gamle Oslo” வில் 72 தொற்றுக்களும் , “Nordstrand” இல் 60 தொற்றுக்களும், “Alna” வில் 52 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.