மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து தலைநகர் நுர்சுல்தன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 95 பயணிகள் 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 100 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தையடுத்து, நிகழ்விடத்திற்கு அவசர உதவி மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாகவும் காயமடைந்த 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் சிலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.