கஜேந்திரன் கைது சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கண்டனக் குரல்கள்!

You are currently viewing கஜேந்திரன் கைது சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கண்டனக் குரல்கள்!

யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரைக் அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய ,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில்  9 பேரைக் கைது  செய்துள்ள சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில்   கண்டனக்குரல் எழுந்துள்ளது

​சியோபைன் மெக்டோனாக்

கஜேந்திரன் கைது சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கண்டனக் குரல்கள்! 1

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் தமிழர்களின் உரிமை சிங்கள  அரசால்  மீறப்பட்டது  அதிர்ச்சி  கொடுக்கின்றது என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தனது twitter பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்

​எலியட் கோல்பர்ன் 

கஜேந்திரன் கைது சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கண்டனக் குரல்கள்! 2

கஜேந்திரன் கைது சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கண்டனக் குரல்கள்! 3

 

தமிழ் எம்.பி., திரு கஜேந்திரன், இலங்கை காவல்துறையினரால் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி கைது  குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்  இது தொடர்பில்     இலங்கை அதிகாரிகளிடம்   விசாரணை நடவடிக்கை முன்னெடுக்க  வேண்டுமென்று  கேட்டுக்கொள்வதாக தனது twitter பக்கத்தில் பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன்    சிங்கள அரசின் இந்த செயலுக்கு எதிராக  செய்தி  வெளியிட்டுள்ளார்

கஜேந்திரன் கைது சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கண்டனக் குரல்கள்! 4

பகிர்ந்துகொள்ள

Leave a Reply