யாழ்ப்பாணத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அதனை சந்திவெளி பகுதியில் உள்ள பற்றைகாட்டு பகுதியில் விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.
சிறீலங்கா காவல்த்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து நேற்று மாலை குறித்த பற்றை காடு பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது கேரளா கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் ஆவர்.
நால்வரும் கஞ்சாவை பொதி செய்யும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.