எல்லோரும் பொதுவாக கேட்பது சைக்கிள்காரர் விடுதலை புலிகள் அமைப்பையும்,தேசியத்தையும் தான் மேடைக்கு மேடை கதைக்கிறனீர்கள் முன்னால் போராளிகளுக்கு அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு என்ன செய்தனீர்கள் என்று பலர் கேட்பதண்டு.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் எவ்வளவு செய்ய இயலுமோ அவ்வளவிற்கு வட கிழக்கு பூராகவும் சேவை செய்துள்ளோம்.
அந்த வகையில் தமிழ் கல்விச்சேவை சுவிஸ்லாந்து அமைப்பின் நிதி உதவியோடு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஊடாக கல்வி உதவி செயற்திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டோர் ஆகியவர்களுக்கு உதவிகள் செய்தோம்.மாணவர்கள் உள்ள குடும்பங்களுக்கு பாடசாலைக்கு தேவையான பொருட்களும், அதிலே பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சில மாணவர்களுக்கு சைக்கிளும் வழங்கபட்டது. எமது சேவை வடகிழக்கு பிராந்தியம் பூராகவும் நடைபெறுகின்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கனடா ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் கொரோனா காலத்திலும் சரி இற்றைவரையும் சரி கணிசமான மனிதநேயப்பணிகளை செய்துள்ளார்கள் அத்தோடு மட்டும் அவர்கள் நின்றுவிடாது தமிழ்மக்களின் அரசியல் கருத்தியலை சூடு தணியாது தக்கவைத்துக்கொள்வதோடு கொள்கையில் உறுதியாக நின்று பணியாத துணிவான அரசியலை செய்துவருகின்றார்கள்.
தாயகத்தில் சிறீலங்காவின் அரச கட்டுமானங்களால் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்களை மீட்பதற்காக தொடர்ச்சியாக போராடிவருகின்றார்கள்.
ஐநாவிலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களிலும் தமிழ் மக்களுக்கு சிறீலங்காவால் தமிழின அழிப்பு நடாத்தப்பட்டுள்ளது என உறுதியாக பதிவுசெய்துள்ளார்கள்.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து இவ்வளவும் செய்ய முடிந்தது என்றால் அவர்களுக்கான அறுதிப்பெரும்பான்மை பலத்தை தமிழ் மக்கள் கொடுத்தால் இன்னும் பலமான அரசியல் செயற்பாடுகளை மக்களின் அங்கீகாரத்தோடு செய்ய முடியும் அதேவேளை இவர்களை தவறவிட்டால் மீண்டும் சலுகை அரசியலுக்குள் சிக்குண்டு தமிழ் மக்களின் உரிமை அரசியலுக்கு சாவுமணி அடிக்கப்படும்.
ஆகவே
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அதிக ஆசனங்களுடன் பலப்படுத்துவோம்.
🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲🚲