கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவிப்பு!

You are currently viewing கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவிப்பு!

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் கிட்டத்தட்ட 5,00,000 ராணுவ வீரர்களை குவித்து இருந்தது.

இந்த ராணுவ துருப்புகள் அதிகரிப்பை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான பக்மூட்-ஐ முழுமையாக கைப்பற்ற ரஷ்ய ராணுவ துருப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கிடையில் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 ரஷ்ய வீரர்கள் மோதலில் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அத்துடன் உக்ரைனிய இராணுவத்தின் பொதுப் பணியாளர்கள் சனிக்கிழமையன்று தெரிவித்த தகவலில், ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 179,320 வீரர்களை இழந்துள்ளது.

மேலும் கடந்த 7 நாட்களில் ரஷ்யா அவர்களது 7 டாங்கிகள், 10 கவச பாதுகாப்பு வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகள், பல ராக்கெட் லாஞ்சர், ஒரு ஹெலிகாப்டர், 9 தந்திரோபாய அளவிலான ஆளில்லா வான்வழி வாகனங்கள், 13 டிரக்குகள் மற்றும் 5 யூனிட் சிறப்பு உபகரணங்களை இழந்ததாக தெரிவித்துள்ளது.

இதேவேளை

உக்ரைனின் குடியிருப்பு பகுதியை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். கிழக்கு உக்ரைன் நகரமான ஸ்லோவியன்ஸ்கில் உள்ள குடியிருப்புப் பகுதியை நேற்றைய தினம் ரஷ்ய ஏவுகணை தாக்கியது. அறிக்கையின்படி, இராணுவத்தில் குடிமக்களை சேர்ப்பதை எளிதாகும் மற்றும் அழைக்கப்பட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் மசோதாவில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments