கடற்கரும்புலிகள் மேஜர் சிறி, கப்டன் சின்னவன், இன்றைய விடுதலை தீபங்கள்!
கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.
19.10.1997 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக “டோறா” தாக்குதல் கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திருமாறன் / சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் 18.10.1997 அன்று மாலையிலிருந்து 19.10.1997 அதிகாலை 1.00 மணிவரை சிறிலங்கா கடற்படையினருடனான தொடர்ந்த கடற்சமரில் கடற் கரும்புலிகளினால் டோறா கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.
இதே கடற்சமரில் கடலிலே காவியம் படைத்தவர்கள்…
மேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் – ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
கப்டன் பரமு (கந்தையா சுதாகரன் – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)
கப்டன் நவநீதன் (தங்கவேலாயுதம் சிவானந்தம் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”