21.01.1996 அன்று திருமலை மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றி வளைப்பின் போது சயனைட் உட்க்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் பொழில்வேந்தன் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
21.01.2007 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
21.01.2007 அன்று திருமலை மாவட்டம் மதுரங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நிலவரசன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
21.01.2007 அன்று திருமலை மாவட்டம் மாவிலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் அலையின்பன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
21.01.2007 அன்று யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கீதவாணன், வீரவேங்கை அருளோன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
21.01.2007 அன்று யாழ். மாவட்டம் முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை கானகன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 21.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் எல்லாளன், லெப்டினன்ட் கலாத்தன் , 2ம் லெப்டினன்ட் இளந்தென்றல், 2ம் லெப்டினன்ட் அருளரசன் ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.










தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”