வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும், தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம், கப்பல்கட்டும் தளங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் வடகொரிய அதிபர் கிம் குறிப்பிட்டார்.