இந்திய இழுவை படகுகளினால் உயிரிழந்த கடற்றொழிலாளர்களுக்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்களின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்கள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மரணத்திற்கு இந்திய இழுவைபடகுகளை விற்று நட்டஈடு வழங்க போவதாக செய்தி வெளியானது.
ஆனால், அதே இந்திய இழுவைபடகுகளால் வடமராட்சி பகுதியில் இரு உயிர்கள் போயுள்ளன. படகுகளும் சேதமாக்கப்பட்டன.
பருத்தித்துறை பகுதியில் ஒரு உயிர் போனது, அத்துடன் படகு சேதமாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. இதற்கான நட்டஈடு பற்றியும் யாரும் பேச முன்வரவில்லை” என தெரிவித்துள்ளார்.