286 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்களை வரவேற்கும் விதமாக விண்கலத்தை சுற்றி டால்பின்கள் வட்டமடித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்பினர். இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டது.