ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில், மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளனர்.
இதனை அவதானித்த ஹிக்கடுவை சிறீலங்கா காவற்துறை உயிர்காப்பு பிரிவினர், நீரில் மூழ்கிய மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹிக்கடுவை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.